மக்களைத் தேடி மருத்துவம்

தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவ முகாமில் கெருகம்பாக்கத்தில் உள்ள கே.கே. இன்ஸ்டிட்யூட் ஆப் ஹெல்த் சயின்ஸ்-ல் சுகாதார ஆய்வாளராக பயிற்சி பெறும் மாணவர்கள் தமிழக அரசுடன் இணைந்து மருத்துவ சேவையை செய்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத இடங்களில் தமிழக அரசு மக்களைத்
தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலமாக அனைத்துப் பகுதிகளிலும்
சுகாதார பணியாளர்களைக் கொண்டு மருத்துவ சேவையில் ஈடுபட்டு வருகிறது.
குன்றத்தூர் பகுதியில் உள்ள கோவூர், தண்டலம், கெருகம்பாக்கம், பெரிய பணிச்சேரி பகுதியில் நடந்த மக்களைத்தேடி மருத்துவம் முகாமில் கே.கே. இன்ஸ்டிட்யூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் சுகாதார ஆய்வாளராக பயிற்சி பெறும் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் அரசு பணியாளர்களுடன் இணைந்து மக்களுக்கு மருத்துவ சேவையை செய்தனர்.
கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் பயிற்சி பெறும் சுகாதார ஆய்வாளர்கள் இணைந்து பொது மக்களுக்கு தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய சுகாதார விழிப்புணர்வை அளித்தனர்.
Leave a Reply