முப்பெரும் விழா நடைபெற்றது

மகரிஷி வித்யா மந்திர் அவிக்னா செலஸ்ட் பள்ளியில், ஈச்சங்கரணை ஜனவரி 13 அன்று தமிழ் இலக்கியமன்றத் தொடக்கவிழா, பாரதியார் பிறந்தநாள் விழா, தமிழர் பெருவிழா (பொங்கல் விழா) என முப்பெரும் விழாவாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினாரக மகாகவி சுப்பிரமணி பாரதியின் மருமகன் இர. சுந்தர் அழைக்கப்பெற்றார். தமிழ்த் துறைத் தலைவர் செல்வபூபதி அவர்கள் வரவேற்புரை நல்கிட, தமிழ்த் துறையைச் சார்ந்த தமிழாசிரியர் முத்துவேம்பன் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கிட , சிறப்பு விருந்தினருக்குப் பள்ளி முதல்வர். Dr. கணேசன் அவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். Dr. Dr. உமாமகேஸ்வரி (பள்ளியின் தாளாளர்) மற்றும் பூர்ணிமா (பள்ளியின் துணை முதல்வர்) ஆகியோர் நினைவு பரிசினை வழங்கி கௌரவ படுத்தினர்.
விழாவில் கலந்துகொண்டு பேசிய இர. சுந்தர் அவர்கள் பாரதியின் நினைவுகளை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் இறுதி நிகழ்வாக முளைப்பாரி எடுக்கப்பட்டு கும்மிப்பாட்டு பாடியும் ஆடியும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இறுதியில் தமிழ்த் துறை ஆசிரியர் அ. ஜெயபாரதி நன்றியுரை கூறினார்.
Leave a Reply