ஐயப்பன்தாங்கலில் குடியிருப்போர் நலச்சங்க பெண் தலைவரின் சாதனைகள்

ஐயப்பன்தாங்கலில் குடியிருப்போர் நலச்சங்க பெண் தலைவரின் சாதனைகள்

சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள அசோக் பிருந்தாவண் நகர் மற்றும் தனலட்சுமி நகரின் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் திருமதி. ஆனந்தி முத்துக்குமார் ஆவார். இவர் அச்சங்கத்தின் தலைவராக கடந்த 2018 ஆம் ஆண்டில் சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாள் முதல் அவர் தன்  அயராது முயற்சியில் அந்த நகர் மக்களின் பல வருட கோரிக்கைகளை தமது முயற்சியால் இந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளார். அவர்  நிறைவேற்றிய பல திட்டங்களை பட்டியலிடலாம். அதில் மிக முக்கியமானது அம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிறுவர் பூங்கா அமைத்தது. சாலை வசதி  செய்து கொடுத்தது, நகரின் பாதுகாப்புக்காக (சிசிஜிக்ஷி) அமைத்தது போன்ற பல வசதிகள். தமது முழு முயற்சியில் இதற்காக அனைத்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை  தொடர்பு கொண்டுள்ளார். அப்போது ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற  உறுப்பினரும் தற்போது  ஊரக தொழில் துறை அமைச்சருமான திரு. தா.மோ. அன்பரசன் அவர்களின் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக பல நல்ல திட்டங்களை இப்பகுதி மக்களுக்காக கொண்டுவந்தார். இவர் செய்த பல சாதனைகளை பாராட்டிய அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் தற்போது  நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஐயப்பன்தாங்கல் ஊராட்சி வார்டு எண்-2ல் வார்டு  உறுப்பினர் பதவிக்கு ஆளும் தி.மு.க. கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.  அவர் பெற்றி பெற அப்பகுதி மக்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். தான் வெற்றி பெற்றால் அப்பகுதி மக்களின் அனைத்து தேவைகளையும உடனடியாக  ஆளும்கட்சி சார்பில் நிறைவேற்றி தருவதாக அவரும் வாக்குறுதி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *