Letter to the Editor

போரூர் சமயபுரம் 8வது தெரு, டோல்கேட் அருகிலுள்ள காலி மனைகளிலும் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டு வாசல் முன்பு கடந்த மூன்று மாதங்களாக கழிவு நீர் தேங்கி கிடக்கின்றன.
இந்த கழிவு நீர் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கொசுக்களும் நோய் கிருமிகளும் பரவி கொண்டே வருகிறது. இங்கு வசிக்கும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதை குறித்து இங்குள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இது வரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் டெங்கு, மலேரியா மற்றும் தொற்று நோய்கள் பரவுமோ என்று பொது மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.
இப்படிக்கு,
சமயபுரம் பொதுமக்கள்
Leave a Reply